Aran Sei

டிராக்டர் பேரணி வன்முறை : இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் விவசாய சங்க தலைவர்

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக, ஜம்மு காஷ்மீர் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர் மொஹிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வன்முறை தொடர்பாக, ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இருந்து கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்.

நேற்று (பிப்ரவரி 22) இரவு, ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த மொஹிந்தர் சிங்கை, காந்தி நகர் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் சவுத் அழைத்திருக்கிறார்.  காவல் நிலையம் சென்றவர் வீடு திரும்பாததால், குடும்பத்தார் காந்தி நகர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது, டெல்லியில் இருந்து வந்த ஒரு காவல்துறை குழு கைது செய்து அவரை கூட்டி சென்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மொஹிந்தர் சிங் குடும்பத்தினர் கூறியுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து மொஹிந்தர் சிங்கின் குடும்பத்தினர் போராட்டம் செய்யத் தொடங்கியதை அடுத்து, காந்தி நகர் காவல்நிலைய ஆய்வாளர் குர்ணம் சிங்  சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவரை கைது செய்வதற்கு தங்களிடம் முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் குடும்பத்தினர் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளதாக  அச்செய்தி தெரிவித்துள்ளது.

டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் மொஹிந்தர் சிங் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவர் ஒருபோதும் டெல்லி செங்கோட்டைக்கு செல்லவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

டிராக்டர் பேரணி வன்முறை : இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் விவசாய சங்க தலைவர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்