Aran Sei

கட்டுரை வெளியானபோது 12 வயதில் இருந்த காஷ்மீர்வாலா தற்காலிக ஆசிரியர் – ஜம்மு காஷ்மீர் காவல்துறை சம்மன்

Credit: The Wire

யங்கரவாத தடுப்பு விசாரணை தொடர்பாக காஷ்மீர் வாலாவின் தற்காலிக ஆசிரியர் யஷ்ராஜ் ஷர்மாவிற்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உளவுப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

2011 ஆண்டில் வெளியான தேசத்துரோக கட்டுரைக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில், ஜூன் 2 ஆம் தேதி ஜம்முவில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ) சம்மன் அனுப்பியுள்ளது.

23 வயதான யஷ்ராஜ் சர்மாவிற்கு, கட்டுரை வெளியானபோது வயது 12 என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் வாலா இதழில் 2011 ஆண்டு வெளியான கட்டுரை – கட்டுரையாளரை கைது செய்த ஜம்மு காஷ்மீர் புலனாய்வு அமைப்பு

முன்னதாக, இது கட்டுரை தொடர்பாக காஷ்மீர் வாலா இணையதளத்தின் அசிரியர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டு எஸ்.ஐ.ஏ காவலில் உள்ளார். கட்டுரையை எழுதிய காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி மாணவர் ஆலா ஃபாசிலியை கைது செய்துள்ள எஸ்.ஐ.ஏ, அவரது வீட்டில் சோதனை நடத்தியது.

ஃபஹத் ஷாவிற்கு பதிலாக தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் யஷ்ராஜ் சர்மாவிற்கு 12 வயதாக இருக்கும்போது ”அடிமைத்தனத்தின் தடைகளை உடைக்கும்” என்ற கட்டுரை நவம்பர் 6, 2011 ஆம் தேதி வெளியானது.

ராஜஸ்தானை சேர்ந்த அவர் 2018 ஆம் ஆண்டில் இருந்து காஷ்மீர் வாலாவில் பணியாற்றி வருகிறார்.

மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

காஷ்மீர் வாலா மற்றும் ஆலாவுக்கு எதிரான, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 120-பி (கிரிமினல் சதிக்கான தண்டனை), 121 (இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுக்க அல்லது போர் தொடுக்க முயற்சித்தல் அல்லது போர் தொடுக்க தூண்டுதல்), 124 (தேசத்துரோகம்) ஆகியவற்றின் பிரிவுகள் 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை) மற்றும் 18 (பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல்) ஆகியவற்றை எஸ்.ஐ.ஏ பயன்படுத்தியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-பி (குற்றச்சாட்டுக்கள், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான கூற்றுகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ் யஷ்ராஜுக்கு வழங்கப்பட்ட சம்மனில், “ஜம்முவில் உள்ள ஜி.ஐ.சி / எஸ்.ஐ.ஏ காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் சூழ்நிலைகளை நீங்கள் அறிந்திருப்பதாகத் தோன்றினாலும், இந்த வழக்கு தொடர்பான சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நோக்கத்திற்காக 02-06-2022 அன்று அல்லது அதற்கு முன்னர் ஜம்முவில் உள்ள ஜி.ஐ.சி மீரான் சாஹிப் காவல் நிலையத்தில் நீங்கள் ஆஜராக வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Wire

ADMK Ponnaiyan தெரிவிச்ச கருத்து 100% உண்மை Theni Karnan | Sasikala | Nayinar Nagendiran | Ponnaiyan

கட்டுரை வெளியானபோது 12 வயதில் இருந்த காஷ்மீர்வாலா தற்காலிக ஆசிரியர் – ஜம்மு காஷ்மீர் காவல்துறை சம்மன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்