மகர சங்கராந்தியை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு பிறப்பித்த உத்தரவு கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் உயர்கல்வித்துறை இயக்குனர் அளித்த உத்தரவில், “2022 ஜனவரி 14 அன்று, புனிதமான மகர சங்கராந்தியை முன்னிட்டு, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் கீழ் ஒரு பெரிய அளவிலான இணையவழி சூரிய நமஸ்காரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த திட்டத்தில் தீவிரமாக பங்கேற்பதை உறுதி செய்யவும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, இவ்வுத்தரவு அரசாங்கத்தின் வகுப்புவாத மனப்பான்மையின் பிரதிபலிப்பு என்று கூறியுள்ளார்.
“இந்திய அரசின் இத்தவறான செயல்களானது காஷ்மீரிகளை இழிவுபடுத்துவதையும் ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
“மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்கு யோகா உள்ளிட்டவற்றை செய்ய இஸ்லாமிய மாணவர்களை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? மகர சங்கராந்தி ஒரு பண்டிகை. அதைக் கொண்டாடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அல்லாத மாணவர்கள் ஈகை திருநாள் கொண்டாட வேண்டும் என்று இது போன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பாஜக மகிழ்ச்சியடையுமா?” என்று முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
If tomorrow muslim CM issues an executive order that everybody should observe fast on ramzan, how will that sound for non-muslim community members? Babus, should stop imposing religious practices over people, they have no right to interfere in these matters. pic.twitter.com/KclY6oJrEo
— Umesh Talashi (@UTalashi) January 13, 2022
தேசிய மாநாட்டு கட்சியின் இளைஞரணித் தலைவரான உமேஷ் தலாஷி, “நாளை ஒரு இஸ்லாமிய முதலமைச்சர், அனைவரும் ரம்ஜான் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவைப் பிறப்பித்தால், அது இஸ்லாமியர் அல்லாத சமூகத்தினருக்கு எப்படி இருக்கும்? மக்கள் மீது மத பழக்கவழக்கங்களை திணிப்பதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரங்களில் தலையிட அவர்களுக்கு உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.