Aran Sei

ஜிக்னேஷ் மேவானி கைது: பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி

பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? இங்கே அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா என்று ஜிக்னேஷ் மேவானி கைது குறித்து மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் ஏப்ரல் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி

ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று அவரின் உதவியாளர் கூறியிருந்தார்.

பின்னர், அவரின் ட்விட்டர் பதிவுக்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து

பின்னர், கைது குறித்து பேசிய ஜிக்னேஷ் மேவானி, ”நம் நாட்டில் மத ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடப்பதால், இச்சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த ட்வீட்டில் கூறி இருந்தேன். அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இச்செயல் அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

கைதுக்குப் பிறகு அசாம் நீதிமன்றத்தில் ஜிக்னேஷ் மேவானி ஆஜர் படுத்தப்பட்டார். அவரின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளக் காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில்,  மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அவர்கள் அசாம் காவல்துறையினரால் பொய்வழக்கில் கைது.

பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? இங்கே அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா?

மோடி அரசின் இந்த ஃபாசிசப் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான் – பேராசிரியர் ஜெயராமன் விளக்கம்

ஜிக்னேஷ் மேவானி கைது: பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்