ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர் கொல்லப்பட்டது குறித்து, குஜராத் சட்டசபையில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் மேவானி, சட்டசபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிலத்தை அபகரிக்க உயர்சாதியினர் முயற்சி – எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலித் செயல்பாட்டாளர்
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தித்திற்குட்டப்பட்ட, சனோதர் கிராமத்தில் அம்ராபாய் போரிச்சா என்ற தகவல்அறியும் உரிமை சட்டசெயல்பாட்டாளர் அவரது நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்கச்சாதியினர் மீது புகார் அளித்ததன் காரணமாகக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம்குறித்து நேற்று கேள்வி எழுப்பிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி , கைகளில் அம்ராபாயின் புகைப்படத்தை உயர்த்தி பிடித்து அம்ராபாய் காவல் துறையின் கண்முன்னே கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் ஆணவக்கொலை – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி நடந்துள்ள பயங்கரம்
ஜிக்னேஷ் மேவானி கையில் வைத்திருந்த சுவரொட்டியில் ” அரசு ஏன் குற்றவாளிகளை காப்பாற்றுகிறது ? ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி குஜராத் சட்டசபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் , “வழக்கு பதிந்து 17 நாட்கள் ஆகியும் இந்தக் குற்றத்தில் சம்பந்தபட்ட காவல்துறை ஆய்வாளர் கைது செய்யவில்லை ” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.