அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் காவல்துறையினர் நேற்றிரவு (ஏப்ரல் 20) கைது செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்ட அவர், இன்று (ஏப்ரல் 21) அசாமுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
கைதுக்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசியுள்ள ஜிக்னேஷ் மேவானி, “எனக்கு எஃப்ஐஆர் நகல் வழங்கப்படவில்லை. நான் எழுதிய ஒரு ட்வீட்டுக்காக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்திருப்பதாக கூறுகிறார்கள். அந்த ட்வீட்டில், அனைவரும் அமைதிக்காக வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நம் நாட்டில் மத ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடப்பதால், இச்சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த ட்வீட்டில் கூறி இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு
“அமைதியை நிலைநாட்ட வேண்டும் என நான் கோரியதற்கு என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இச்செயல் அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. இவ்வழக்கு குறித்த முழு விவரங்கள் எனக்கு அளிக்கப்படவில்லை” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடும்பத்தினருடன் பேசக்கூட எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதுபோன்ற வழக்குகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி, முன்னாள் பத்திரிகையாளர் ஆவார். சுயேச்சை எம்எல்ஏவான இவர், காங்கிரசுக்கு தனது ஆதரரை அளித்து வருகிறார்.
Source: New Indian Express
குடியரசுத் தலைவர் ஆகிறாரா இளையராஜா – பத்திரிகையாளர் ஜென்ராம் விளக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.