Aran Sei

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் ஒரு ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் காணொளி வைரலானது. அந்த காணொளியில் தாக்கப்படும் ஆசிரியர் சுமன் சிங் மாணவர்களிடம் சாதிய ரீதியாக பேசிய புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து ஆசிரியர் பதவிக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்று மாவட்ட துணை வளர்ச்சி ஆணையர் கரன் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் அகாடமிக் கவுன்சில் நடத்திய 9 ஆம் வகுப்பு தேர்வில் ஆசிரியர் சுமன் சிங் மாணவர்களுக்கு நடைமுறை மதிப்பெண்களை வழங்கவில்லை என்று காரணத்தினால்தான் அவரை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் அடித்துள்ளனர்.

சாதிப் பாகுபாடு சர்ச்சை: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் அனுராதா இடைநீக்கம்

தும்காவின் கோபிகந்தர் வட்டத்தில் உள்ள பஹாரியா உச்சா வித்யாலயாவில் 245 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களில் பெரும்பாலோர் பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், தலைமை ஆசிரியர் சுமன் சிங் மாணவர்களிடம் சாதிய ரீதியாக பேசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை அடுத்து சுமன் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அப்போது மாணவர்கள் தலைமை ஆசிரியர் சுமன் சிங்கை இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதே பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து ஆசிரியராக சுமன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு சாதி அடிப்படையிலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக நினைத்த நேரத்தில் தான் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இன்னும் இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மாவட்ட துணை வளர்ச்சி ஆணையர் கரன் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

Source : indian express

Rangaraj Pandey blabber on Coimbatore Vinayagar Chathurthi Issue – Maruthaiyan | Hindu Munnani Bjp

ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்