Aran Sei

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு

Credit: The Hindu

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதோடு, சட்டப்பூர்வ சோதனை மேற்கொள்ள விடாமல் தடுத்து வருவதாகவும் மேற்கு வங்க காவல்துறையின் குற்றவியல் புலனாய்வு துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெரும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளை கைது செய்வதும், சோதனை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதும் ஆதாரங்கள் காணாமல் போக வழிவகுக்கும். இதற்குப் பொறுப்பு சோதனை மேற்கொள்ள விடாமல் தடுக்கு டெல்லி காவல்துறையினர் அதிகாரிகள் தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “பஞ்ச்லா காவல் நிலைய வழக்கு எண் 276/22 இன் விசாரணை தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தேடுதல் வாரண்டை செயல்படுத்த மேற்குவங்க சிஐடி பிரிவின் டெல்லி சென்றுள்ளனர். எனவே, இந்த வழக்கில் டெல்லி காவல்துறையின் ஆணையர் தலையிட வேண்டும்.” என்று கோரப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ந்துவிட்டது தண்டோரா தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

டெல்லி காவல்துறையின் தென்மேற்கு மண்டல துணை ஆணையரின் உத்தரவின் பெயரில் சோதனை தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மேற்குவங்க காவல்துறை, “பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சித்தார்த் மஜும்தாரின் வீட்டை சோதனையிட மேற்கு வங்க காவல்துறையை சேர்ந்த 4 சிஐடி அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். சோதனை மேற்கொள்ள  அனுமதி வழங்கி ஹவுரா நீதிமன்ற பிறப்பித்த வாரணட்டின் நகலையும் அதிகாரிகள் காட்டியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழு டெல்லி செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஜூலை 30 ஆம் தேதி, ஹவுராவில் உள்ள பாஞ்சாலாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்சால் கொங்கரி ஆகியோர் ரூ .49 லட்சம் பணத்துடன் கைது செய்யப்பட்டனர்.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

ஜார்க்கண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதால் அவர்களின் கைது ஒரு அரசியல் சர்ச்சையைத் தூண்டியது.

செவ்வாயன்று இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரின் அலுவலகத்தில் சிஐடி சோதனை நடத்தி, அதிக பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Source: The Hindu

Nirmala Sitharaman vs Tamilnadu MPs in Parliament | Kanimozhi | Ptr palanivel | Annamalai | 5g scam

 

ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த விவகாரம் – விசாரணை மேற்கொள்ள விடாமல் டெல்லி காவல்துறை தடுப்பதாக மேற்கு வங்க காவல்துறை குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்