நபிகள் நாயகத்தை பாஜகவை சேர்ந்த (முன்னாள்) செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை ஜூன் 14 ன்று காவல்துறையினர் சுவரொட்டியாக வீதிகளில் ஒட்டினர். இது தொடர்பாக ஜார்கண்ட் அரசு காவல்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத சுவரொட்டிகள் ஒட்டியது சம்பந்தமாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஜார்கண்ட் மாநில உள்துறை செயலாளர் ராஜீவ் அருண் எக்கா நேற்று (ஜூன் 15) நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில், காவல்துறையின் இத்தகைய அணுகுமுறை அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ராஞ்சியில் நடைபெற்ற வன்முறை போராட்டங்களை கலைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது சம்பந்தமாக பதில் அளிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் ராஞ்சி முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் புகைபடங்களை வெளியிடுங்கள். இதனால் பொதுமக்கள் அவர்களை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்று காவல்துறையினரிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதன் பின்னர்தான் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ராஞ்சி வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Source : the print
அதானிக்கே கொடுங்க’ – கட்டாயப்படுத்திய மோடி | இலங்கையில் நடந்த களேபரம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.