ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகைகளை மேற்கோள் காட்டியுள்ள ஜார்க்கண்ட் மாநில நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஒரான், ஜார்க்கண்ட் மாநிலத்தை ஏழையாக வைத்துள்ளது ஒன்றிய அரசுதான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று(டிசம்பர் 28), ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ராமேஷ்வர் ஒரான், கோல் இந்தியா மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தண்ணீர் கட்டணம் போன்றவற்றுக்காக ரூ.65,000 கோடிக்கு மேல் ஒன்றிய அரசு ஜார்க்கண்ட் அரசிற்கு பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிற்குள் இருக்கும் எதிரிகளால் தாக்கப்படுகிறதா இந்தியா? – சல்மான் குர்ஷித் கேள்வி
“நான் இதைச் சொல்லக்கூடாதுதான். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தை ஒன்றிய அரசுதான் ஏழையாக வைத்திருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். கோல் இந்தியா நிறுவனத்திற்காக ஒன்றிய அரசு எடுத்துக்கொண்ட 53,000 ஏக்கர் நிலத்துக்கு, 65,000 கோடி ரூபாய் மாநில அரசிற்கு அது தர வேண்டிய பாக்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தாமோதர் வேலி கார்ப்பரேஷன் மற்றும் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் ஜார்கண்டிற்கு தோராயமாக 10,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன என்று பட்டியலிட்டுள்ள ராமேஷ்வர் ஒரான்,
இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வெறும் 300 கோடி ரூபாய்தான் வழங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.
தான் வழங்கும் பாதுகாப்பிற்கு ஒன்றிய அரசு பணம் கேட்பதாக கூறியுள்ள அவர், “ஒன்றிய அரசுதான் நம் எல்லைகளை வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பிற்கும் ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும். அதற்கு மாநில அரசு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.