Aran Sei

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக அலைகிறது – நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன். 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 48 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

ஆனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் பாஜகவினரும் அதன் கூட்டணிக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் கட்சியினரும், 2 சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடந்து முடியும் நேரத்தில் பாஜகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஜார்க்கண்ட்: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் கைது

“எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜகவினர் பணப்பெட்டியுடன் சுற்றி வந்தனர். அவர்களை விலைக்கு வாங்கும் பொறுப்பு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. பாஜக தேர்தல் வெற்றிகளுக்காக ஆங்காங்கே குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறையை நிகழ்த்தி உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல்களை உருவாக்குகிறது. அவர்கள் ஜனநாயகத்தை சிதைத்துவிட்டனர். எப்போதும் எங்கும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்” என்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார்.

2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் : சுரங்க ஒப்பந்த ஊழல் – முதலமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

2021 மே மாதம் ராஞ்சியின் அன்காரா வட்டத்தில் 0.88 ஏக்கர் பரப்பிலான குவாரி, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பதவியை தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக கல்குவாரி உரிமத்தை அவர் பெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது. மேலும், ஹேமந்த் சோரன் அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி, மாநில ஆளுநர் ரமேஷ் பெய்ஸிடம் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.

Source : NDTV

கிரிக்கெட் வீரர்களை மதத்தை வைத்து வம்பிழுக்கும் சங்கிகள் | Kiyare Setting ah? | Arshdeep Singh

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக அலைகிறது – நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்