பணிப்பெண்ணை சித்ரவதை செய்த விவகாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் அந்தக் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஞ்சி காவல்துறையின் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சீமா பத்ரா தன்னை சித்ரவதை செய்து வருவதாக அவரது வீட்டு பணிப்பெண். காணொளி மூலம் தெரிவித்திருந்தார் அந்த காணொளி வைரலானது. இதன்காரணமாக, அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்ட்து. பாஜக தேசிய செயற்குழுவின் மகளிர் அணி உறுப்பினராக சீமா பத்ரா இருந்தார். அவரது கணவர் மகேஸ்வர் பத்ரா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுனிதா ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பட்ராஸ் பகுதியில் உள்ள சீமா பத்ரா வீட்டில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சில காலம் சீமா பத்ராவின் மகள் வத்சலா பத்ராவின் டெல்லி வீட்டில் பணிபுரிந்துள்ளார். டெல்லியில் இருந்து வத்சலா பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு திரும்பியவர், சீமாவின் வீட்டில் பணிபுரிந்துள்ளார். அப்போதிலிருந்தே அவர் சீமா பத்ராவிடம் இருந்து சித்ரவதைகளை சந்தித்து வந்துள்ளார். சுனிதா தற்செயலாக வீட்டை வெளியே செல்ல நேர்ந்தால், அவர் சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அந்த அளவுக்கு கொடுமைகளை எதிர்கொண்டுள்ளார்.
லிவ் இன் உறவு, தன்பாலின உறவு ஆகியவையும் குடும்ப அமைப்புதான் – உச்ச நீதிமன்றம்
சீமாவின் மகன் ஆயுஷ்மான் சுனிதாவுக்கு உதவ முயன்று ஜார்க்கண்ட் அரசாங்கத்தில் பணியாளர் துறை அதிகாரியாக இருக்கும் அவரது நண்பர் விவேக் பாஸ்கியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீமா மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுனிதா மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதும் அவரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையாரை பாஜக மெம்பராக்க துடிக்கும் சங்கிகள் | Maruthaiyan Interview | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.