Aran Sei

ஜம்மு காஷ்மீர்: ஷேக் நகர் ‘சிவநகர்’ என்றும், அம்பாலா சவுக் ‘அனுமான் சவுக்’ என்றும் ஊர்ப்பெயர்கள் மாற்றம்

காஷ்மீர் தலைநகர் ஜம்முவில் உள்ள இரு ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் ஜம்மு மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் சாரதா குமாரி என்பவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் படி ‘ஷேக் நகர்’ என்ற பகுதி ‘சிவ நகர்’ என மாற்றப்பட உள்ளது. ‘அம்பாலா சவுக்’ என்ற பகுதி ‘அனுமான் சவுக்’ என மாற்றப்பட உள்ளது.

ராஞ்சி: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடக் கோரி தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

ஜூன் 11 அன்று நடைபெற்ற ஜம்மு மாநகராட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அப்பகுதிகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு மாநகராட்சியில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் இந்த 2 ஊர்ப்பெயர்களின் பெயர்களை மாற்றும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியதாக ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர் மோகன் குப்தா தெரிவித்துள்ளார்.

மறுபெயரிடுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தீர்மானம் இப்போது ஜம்மு காஷ்மீர் சிவில் செயலகத்திற்கு அனுப்பப்படும். எனினும் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் ஊர் பெயர்களை மாற்றுவதற்கு பதில் அங்குள்ள பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு தருவதில் கவனம் செலுத்த மாநில அரசுக்கு சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.

Source : The Print

அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP

ஜம்மு காஷ்மீர்: ஷேக் நகர் ‘சிவநகர்’ என்றும், அம்பாலா சவுக் ‘அனுமான் சவுக்’ என்றும் ஊர்ப்பெயர்கள் மாற்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்