Aran Sei

ஜம்மு காஷ்மீர்: ராணுவம் நடத்தும் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை – உத்தரவைத் திரும்பப் பெற்ற பள்ளி நிர்வாகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில், பள்ளி நேரங்களில் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை  ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

இராணுவம் மற்றும் இந்திராணி பாலன் அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள டாகர் பரிவார் பள்ளியின் ஏப்ரல் 25 (செவ்வாய்) தேதியிட்ட பள்ளி முதலமைச்சர் அனுப்பிய சுற்றறிக்கையில்,“பள்ளி நேரங்களில் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பின்னர் அடுத்த நாள் (ஏப்ரல் 26) திருத்தப்பட்ட சுற்ற்றிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹிஜாப் (தலை மறைப்பு) என்ற வார்த்தைக்கு பதிலாக ‘நிகாப்’ (முகத்திரை) என்று மாற்றப்பட்டது.

ஏப்ரல் 25 தேதியிட்ட சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. முதல்வர் உட்பட பள்ளி நிர்வாகத்திடம் கருத்து கேட்கும் முயற்சி பலனளிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி இந்த உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஹிஜாப் அணிவதை தடைசெய்யும் உத்தரவை வெளியிட்ட இந்த கடிதத்தை கண்டிக்கிறேன். பாஜகவால்  ஜம்மு காஷ்மீர் ஆளப்படலாம்.  ஆனால் இது வேறு எந்த மாநிலத்தையும் போல் நிச்சயமாக இல்லை.  பாஜகவினர் சிறுபான்மையினரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து, அவர்கள் விரும்பும் உடையை அணிய அனுமதிக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை விட்டுவிட மாட்டார்கள். தேர்வு செய்யும் உரிமை” என மெகபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்ளிட்ட மத உடைகளை அணியத் தடை விதியுங்கள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறுகையில், இது அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்சி  என்று தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தை பின்பற்றச் சுதந்திரம் உள்ளது. மதச்சார்பற்ற நாடு, அதாவது அனைத்து மதத்தினரும் சமம் என்று நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எந்த அரசும் தலையிடக் கூடாது என்று நினைக்கிறேன்.

சென்னையின் ஒரு தனியார்ப் பள்ளியில் தனது மகனை சேர்க்க சென்ற ஹிஜாப் அணிந்த தாய்: அனுமதி மறுத்த பள்ளி நிர்வாகம்

“இது நாட்டுக்குப் பிரச்சினையை உண்டாக்கும் அபாயத்துடன் விளையாடுகிறது. இதுபோன்ற முடிவுகளை எடுக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரும் தங்கள் சொந்த மதத்தை பின்பற்ற சுதந்திரமாக இருக்க வேண்டும்” என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை ஜம்மு காஷ்மீருக்குள் கொண்டுவரும் முயற்சி உடனடியாக நிறுத்தப்படும் என நம்புகிறோம். பள்ளியில் இது போன்ற ஆணையை வழங்குவது தவறு என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Source: newindianexpress

தஞ்சாவூர் தேர் விபத்தை வைத்து கலவரத்தை தூண்டும் மாரிதாஸ்

ஜம்மு காஷ்மீர்: ராணுவம் நடத்தும் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை – உத்தரவைத் திரும்பப் பெற்ற பள்ளி நிர்வாகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்