Aran Sei

பட்ஜெட்: சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பு – ஜெய்ராம் ரமேஷ்

ன்றிய பட்ஜெட்டானது ஒருபுறம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுகிறது. மறுபுறம் சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று(பிப்பிரவரி 1), 2022-23ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், “ஒன்றிய பட்ஜெட்டானது ஒருபுறம் பருவநிலை மாற்றத்தை குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுகிறது, ஆனால் மறுபுறம் சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பை ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இவற்றையெல்லாம் பேசுகையில் நன்றாக இருக்கும். ஆனால், செயல்பாடுகள்தான் முக்கியம். அவ்வகையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் அழிவு பாதையில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஜெய்ராம் ரமேஷ், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக செயல்பட்டவர்.

பட்ஜெட்: சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பு – ஜெய்ராம் ரமேஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்