வடக்கு டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக வழங்கிய அறிக்கையை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து எந்த அமைப்பின் பெயரையும் குறிப்பிடாமல் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜஹாங்கிர்புரியில் அனுமதியின்றி அனுமன் ஜெயந்தி நடத்தியதற்காக முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிமை ஒரு முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறை பதிவு செய்திருந்த நிலையில் இன்று இரண்டாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 188 (அரசு ஊழியர்கள் மீதான பிரகடனத்தை மீறுதல்) கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக ஒருவர் விசாரணையில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை ஆணையர் (டிசிபி) உஷா ரங்காணி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை காலை மற்றும் மதியத்தில் நடைபெற்ற இரண்டு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “அனுமதியின்றி மத ஊர்வலலத்தை நடத்தியதற்காக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பின் உறுப்பினர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த விஎச்பி தலைவர் பிரேம் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிணையில் வெளிவர அனுமதி வழங்கும் ஐபிசி பிரிவு 188 கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி டெல்லி காவல்துறை, விசாரணைக்கு பிறகு பிரேம் சர்மாவை விடுவித்துள்ளது.
டெல்லி: ஜஹாங்கிர்புரி வன்முறை – விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மீது வழக்கு பதிந்த காவல்துறை
விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளின் பெயரை குறிப்பிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கையை திரும்பப் பெற்ற டெல்லி காவல்துறை, எந்த அமைப்புகளின் பெயரையும் குறிப்பிடாமல் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உறுப்பினர்கள் மீதான டெல்லி காவல்துறையின் குற்றச்சாட்டிற்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ள விஎச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், “நாங்கள் அனுமதியில்லாமல் எந்த ஊர்வலத்தையும் நடத்தவில்லை. இந்த முறையும் டெல்லி காவல்துறையின் அனுமதியை பெற்று தான் பேரணி நடத்தினோம். எங்கள் ஷோபா யாத்திரைக்கு (அனுமன் ஜெயந்தி ஊர்வலம்) அனுமதி வழங்கப்படவில்லை என்றால் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள் என்று அவர்களிடம் யாராவது கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
விஎச்பி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், காவல்துறை மீது போர் தொடுப்போம் என்று விஎச்பி தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு உள்ளூர்வாசி மற்றும் 8 காவல்துறையினர் காயமடைந்தனர். சில வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
Source: The Wire
கலவரக்காடாக மாறும் இந்தியா, கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கும் பிர்தமர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.