Aran Sei

ஜஹாங்கிர்புரி வன்முறை: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் ஷாகாவின் வழியாக அணிதிரட்டப்பட்ட பட்டியல் சாதியினர்

ஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகென் சர்க்கர் என்பரால் உள்ளூரில் நடத்தப்படும் ஆர்எஸ்எஸ் ஷாகாவின் வழியாகத்தான் பலரும் அனுமன் ஜெயந்தி பேரணிக்கு அணிதிரட்டப்பட்டுள்ளனர்.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியின் ஜி பிளாக்கில் ஏப்ரல் 16 அன்று நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 25 பேர் கைது காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரம் – 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறை

ஜஹாங்கிர்புரியின் ஜி பிளாக்கில் நடந்த அனுமன் ஜெயந்தி பேரணியில் கலந்து கொண்ட பல இளைஞர்கள் ஹாக்கி ஸ்டிக்குகள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை கூட கையில் ஏந்தியிருந்தனர்.

ஹிந்து வாஹினி மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர் என்று சொல்லிக்கொள்ளும் சுகென் சர்க்காரின் சகோதரர் சுரேஷ் சர்க்கார், உள்ளூர் குழந்தைகளையும் இந்த அனுமன் ஜெயந்தி பேரணியில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஜஹாங்கிர்புரி வன்முறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் பேரணி

நமது பொது எதிரியான இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்துவ அடையாளத்தின் ஒரு பகுதியாக ஜாதியால் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட இந்தச் சமூகங்கள் பங்கெடுப்பதின் வழி அவர்கள் மற்ற இந்துக்களிடமிருந்து ஒரு நற்சான்றிதழ்களை பெற முடியும் என்று சுரேஷ் சர்க்கார் தி ப்ரினிட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஜஹாங்கிர்புரியின் ஜி பிளாக்கில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.

ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இந்துத்துவ சக்திகளுடன் கைகோர்த்த பிறகு, ஒருவிதமான அதிகார உணர்வைப் பெற்றுள்ளதாகப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜஹாங்கிர்புரி கலவரம்: ‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் குடும்பமாக வாழ்ந்தோம்’ என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்

10 ஆம் வகுப்பு படிக்கும் சுரேஷ் சர்க்காரின் மூத்த மகனான சங்கரும் இந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் கலந்து கொண்டுள்ளான். இவனுடன் சேர்த்துச் சேர்ந்து 10 வயதுக்குட்பட்ட 6-7 சிறுவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

வீட்டுப் பாடங்களைச் செய்வதை விட அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் பங்கேற்பது மிக முக்கியமானது. எங்களின் ஆர்எஸ்எஸ் கிளை அவ்வாறுதான் எங்களிடம் கூறியது என்று 15 வயதான சாகர் தெரிவித்துள்ளார்.

ஜஹாங்கிர்புரி கலவரம் தொடர்பாக கைது செய்யபட்டவர் பாஜக பிரமுகர் – ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் ஷாகாவை நடத்தி வரும் சங்கரின் மாமா சுகன் சர்க்கார், மொஹரம் காலத்தில் இஸ்லாமியர்கள் ஆயுதம் எடுக்கும் பொழுது நாம் ஏன் எடுக்கக் கூடாது என்று கூறியதாக சாகர் கூறியுள்ளார்.

“வங்கதேச இஸ்லாமியர்கள் எங்களது வாள்களைப் பறித்தனர். இப்போது இந்துக்களாகிய நாம் அவர்களிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதால், தைரியமாக இருக்க வேண்டும் என்றும், அவர்களைப் பற்றி ஒருபோதும் பயப்படக் கூடாது என்றும் எங்களது ஷாகாவில் சொல்லிக் கொடுக்கப்பட்டது” என்று 13 வயதான ரோஹன் கூறியுள்ளார்.

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: ‘விஎச்பியினரை கைது செய்தால் காவல்துறைக்கு எதிராக போர் தொடுப்போம்’ – விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

எனது மகன் வாள் ஏந்தி பேரணிக்குப் போனது எனக்குப் பெருமிதமாகக் உள்ளது, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நாங்கள் இப்போது ஒரு இந்துத்துவவாதிகள் என்று பெருமையுடன் ரஹானின் தாய் சுகன்யா ஹல்தார் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் பெருகிவரும் மக்கள் தொகையிலிருந்து நமது நாட்டை பாதுகாக்க அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும் என்ற அரத்தத்திலான மீம்கள், காணொளிகளை பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் இந்துத்துவா அமைப்புகள் அப்பகுதியில் பகிர்ந்துள்ளனர்.

Source : The Print

ஜஹாங்கிர்புரி வன்முறை: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் ஷாகாவின் வழியாக அணிதிரட்டப்பட்ட பட்டியல் சாதியினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்