Aran Sei

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு: பார்வையிட வந்த காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்றை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை

னுமன் ஜெயந்தி அன்று, ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட வடமேற்கு டெல்லியின் சுற்றுப்புற பகுதிகளில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தேறிய சில நாட்களுக்குப் பிறகு, பாஜக ஆளும் வடக்கு டெல்லி மாநகராட்சியானது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள பல வீடுகளையும் கடைகளையும் நேற்று (ஏப்ரல் 20) காலை இடித்து தள்ளியது.

இந்த இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை நிறுத்தக் கோரி இரண்டு முறை தலையிட வேண்டியிருந்தது.

டெல்லி ஜஹாங்கிர்புரியைப் பார்வையிட சென்ற அசாதுதீன் ஓவைசி – தடுத்து நிறுத்திய காவல்துறை

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 21), காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று பாதிப்புக்குள்ளான பகுதிக்கு வருகை தந்துள்ளது. ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் அஜய் மகேன் மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷக்திஷின் கோஹில் இடம்பெற்றுள்ள இக்குழுவை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள அஜய் மகேன், “இந்த இடிப்பு நடவடிக்கையானது ஏழை மக்கள் மீதும் அவர்களின் வாழ்வாதாரம் மீதும் நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இது முழுக்க சட்டவிரோதமான நடவடிக்கை. நான் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றியிருக்கிறேன். சட்டம் எவ்வாறு செயல்படுமென எனக்கு தெரியும். முறையான நோட்டீஸ் அனுப்பப்படாமல், இந்த இடிப்பு நடவடிக்கையை செய்திருக்கக் கூடாது. பாஜக தலைவர்கள் பொய் கூறுகிறார்கள்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜஹாங்கிர்புரியில் வீடுகள் இடிப்பு: ‘நாம் நரகத்திற்கு செல்லும் வழியில் இருக்கிறோம்’ – ப.சிதம்பரம்

பாதிப்புக்குள்ளான பகுதிக்கு ஏன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் வரவில்லை என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அணில் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் எப்படி புல்டோசர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது? இது ஒருதலைபட்சமான நடவடிக்கை. அவர்கள் இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் களத்தில் இருக்கிறோம்” என்று அணில் குமார் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து, சாலையில் அமர்ந்த காங்கிரஸ் குழு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

Source: PTI

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு: பார்வையிட வந்த காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்றை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்