டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் குறித்துப் பேசிய திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், சிலைகள் கட்டப்படுகின்றன, வீடுகள் இடிக்கப்படுகின்றன, மக்கள் மௌனமாக இருந்தால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Building Statues..
Breaking Homes ..
If we don’t speak up ..very soon they will destroy NATION too .. #justasking— Prakash Raj (@prakashraaj) April 21, 2022
வடமேற்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, வடக்கு டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆக்கிரமிப்பு பகுதிகளை புல்டோசர் கொண்டு இடித்துள்ளது.
கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையடுத்து, கட்டடங்கள் இடிப்பதை நிறுத்துவதற்காக இரண்டு முறை தலையிட வேண்டியிருந்தது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடிப்பதா? – சீமான் கண்டனம்
இந்நிலையில், ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற வீடு இடிப்பு சம்பவங்களுக்கு திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிலைகள் கட்டப்படுகின்றன, வீடுகள் இடிக்கப்படுகின்றன, மக்கள் மௌனமாக இருந்தால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.