Aran Sei

ஜஹாங்கிர்புரியில் சாலையோர கடைகளை அகற்றும் டெல்லி மாநகராட்சி: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதா?

Credit: The Hindu

டெல்லி ஜஹாங்கிர்புரியில் சாலையோரக் கடைகளை தள்ளுவண்டிகளை புல்டோசர் கொண்டு அகற்றும் வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (என்சிஎம்சி) நடவடிக்கையானது, நடைபாதைவாசிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது.

1985 ஆம் ஆண்டு, அவ்வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “நடைபாதையில் வசிப்பவர்களை அத்துமீறல் செய்பவர்களாக கருத முடியாது. அவர்களை வெளியேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவர்களை துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாது. அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமையை அளித்துள்ளது” என்று தெரிவித்திருந்தது.

‘சிறுபான்மையினர் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்களென பாஜக ஆளும் மாநிலங்களில் பலகை வைக்கிறார்கள்’ – சரத் பவார் குற்றச்சாட்டு

“வாழ்வாதாரம் இல்லாமல் எந்த மனிதனாலும் வாழ முடியாது. அதாவது, வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகள். வாழ்வாதார உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படாவிட்டால், அதை பறிப்பது எளிதான வழி, இத்தகைய நடவடிக்கை, அவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையை குறைப்பதோடு, வாழ்க்கையை வாழ முடியாததாக்கும்” என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

“சட்டப்பிரிவு 19 (1) (e)-ன் கீழ் இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்கும் மற்றும் குடியேறும் உரிமையை யாராலும் பறிக்கும் முடியாது என்றாலும், பொதுச் சொத்தை ஆக்கிரமித்து அத்துமீறி நுழைவதற்கான உரிமைத்தை வழங்க முடியாது. நடைபாதையில் வசிப்பவர்கள் மற்றும் வணிகர்களை வெளியேற்றுவது சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அந்த நடைமுறை நியாயமானதாகவும் ஏற்றுக் கொள்ளத்ததக்கதாகவும் இருக்க வேண்டும்” என்று அரசியலமைப்பு அமர்வு குறிப்பிட்டுள்ளது.    

‘உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அறிமுகமானதும் பிற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்

இந்நிலையில்தான் ஜஹாங்கிர்புரி வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முன்வருமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: The Hindu

தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் –

அதிர்ச்சியளிக்கும் ஆகஸ்பாம் அறிக்கை

ஜஹாங்கிர்புரியில் சாலையோர கடைகளை அகற்றும் டெல்லி மாநகராட்சி:  உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்