கேரள சட்டப் பேரவைத் தேர்தலில், 25 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பெண் வேட்பாளரை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) களம் இறக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், ஐயூஎம்எல் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலோடு ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு கூடுதலாக மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஐயூஎம்எல் கட்சி நேற்று (மார்ச் 12) வெளியிட்டது. அதில், நூர்பினா ரஷீத் என்ற வழக்கறிஞருக்கு, அந்த கட்சி சார்பாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள சட்டப்பேரவையில் முதுல் முறையாக ஐயூஎம்எல் கட்சி சார்பாக, ஒரு பெண் வேட்பாளர் போட்டியிட உள்ளார். நூர்பினா ரஷீத், இதற்கு முன்னர் கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக தேந்தெடுக்கப்பட்டவர்.
Source: The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.