Aran Sei

பாஜகவை வீழ்த்த எதிக்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய நேரமிது – பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

Credit: PTI

பீகாரில் பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். இது இனி நாடு முழுவதும் நடக்கும். வேலையின்மை, பணவீக்கம் மற்றும் மத மோதல்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கால நகர்வுகளுக்கான வியூகத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ்,  நிதிஷ் குமார் மீண்டும் எங்களுடன் கைகோர்த்திருப்பது பாஜகவின் முகத்தில் அறைந்தது போல அவர்களுக்கு உள்ளது. இந்த அரசு மக்களின் அரசு. பீகார் சட்டசபையில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகிவிட்டன. இதேபோன்ற நிலை இனி நாடு முழுவதும் அரங்கேறும் என்று தெரிவித்துள்ளார்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, இந்து-இஸ்லாமியர்  விரோதம் போன்ற பிரச்சினைகளில் பாஜகவுக்கு பீகார் பாடம் கற்பித்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சோனியா காந்திக்கு நன்றி. தனது வாழ்நாள் முழுவதும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடியதற்காக லாலு பிரசாத் யாதவ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் மிரட்டித்தான் பாஜக ஆட்சிக்கு வருகிறது. தற்போது பா.ஜ.க.வின் வேலை ஒன்றேஒன்றுதான். பயப்படுவோரை பயமுறுத்துவது, யார் விலைபோக தயாராக இருக்கிறார்களோ அவர்களை வாங்குவது. பாஜக ஒவ்வொரு அமைப்பையும் நிறுவனத்தையும் அழித்து வருகிறது. அவர்களின் நிலை காவல் நிலையத்தை விட மோசமாகிவிட்டது. பீகார் மக்களாகிய நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். பிஹாரிகள் விற்பனைக்கு அல்ல, எங்களை விலைக்கு வாங்க முடியாது என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாண்ட்: தேசியக் கொடி இல்லாத வீடுகளை புகைப்படம் எடுங்கள் – சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்த பாஜக தலைவர்

பிராந்தியக் கட்சிகள் முடிவடைந்தால், மாநிலங்களின் எதிர்ப்பு முடிவுக்கு வரும், எதிர்க்கட்சி முடிவுக்கு வந்தால், ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அதாவது நாட்டில் சர்வாதிகாரம் இருக்கும். அதை தான் பாஜக விரும்புகிறது. நிதிஷ் குமார் எங்கள் மீது குற்றம் சாட்டினார், நாங்களும் குற்றம் சாட்டினோம். ஆனால் நாங்கள் சோசலிஸ்ட் மக்கள். எனவே நாங்கள் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம் என்று பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்..

செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ்,  நிதிஷ் குமார் மீண்டும் எங்களுடன் கைகோர்த்திருப்பது பாஜகவின் முகத்தில் அறைந்தது போல அவர்களுக்கு உள்ளது. இந்த அரசு மக்களின் அரசு. பீகார் சட்டசபையில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகிவிட்டன. இதேபோன்ற நிலை இனி நாடு முழுவதும் அரங்கேறும் என்று தெரிவித்துள்ளார்.

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, இந்து-இஸ்லாமியர்  விரோதம் போன்ற பிரச்சினைகளில் பாஜகவுக்கு பீகார் பாடம் கற்பித்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சோனியா காந்திக்கு நன்றி. தனது வாழ்நாள் முழுவதும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடியதற்காக லாலு பிரசாத் யாதவ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடி ஏற்றுவதில் சாதியப் பாகுபாடு ஏற்படக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

இன்றைய சூழலில் மிரட்டித்தான் பாஜக ஆட்சிக்கு வருகிறது. தற்போது பா.ஜ.க.வின் வேலை ஒன்றேஒன்றுதான். பயப்படுவோரை பயமுறுத்துவது, யார் விலைபோக தயாராக இருக்கிறார்களோ அவர்களை வாங்குவது. பாஜக ஒவ்வொரு அமைப்பையும் நிறுவனத்தையும் அழித்து வருகிறது. அவர்களின் நிலை காவல் நிலையத்தை விட மோசமாகிவிட்டது. பீகார் மக்களாகிய நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். பிஹாரிகள் விற்பனைக்கு அல்ல, எங்களை விலைக்கு வாங்க முடியாது என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியக் கட்சிகள் முடிவடைந்தால், மாநிலங்களின் எதிர்ப்பு முடிவுக்கு வரும், எதிர்க்கட்சி முடிவுக்கு வந்தால், ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அதாவது நாட்டில் சர்வாதிகாரம் இருக்கும். அதை தான் பாஜக விரும்புகிறது. நிதிஷ் குமார் எங்கள் மீது குற்றம் சாட்டினார், நாங்களும் குற்றம் சாட்டினோம். ஆனால் நாங்கள் சோசலிஸ்ட் மக்கள். எனவே நாங்கள் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம் என்று பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

பாஜகவை வீழ்த்த எதிக்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய நேரமிது – பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்