இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மத ரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்திய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர், அசாதுதீன் ஒவைசி ஐதராபாத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் காணொளியை ட்வீட் செய்துள்ளார்.
மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்
அந்த காணொளியில் பேசும் ஒவைசி, “இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை, மாறாக குறைகிறது, இஸ்லாமியர்களிடையே குழந்தை பெற்றுக் கொள்வதற்கான இடைவெளி அதிகரித்து வருகிறது. ஆணுறைகளை யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? நாங்கள் தான். ஆனால் மோகன் பகவத் இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், “அனைவருக்கும் சமமாகப் பொருந்தும்” மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான கொள்கை இந்தியாவுக்குத் தேவை என்று கூறியதை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
ஆர்எஸ்எஸ்ஸின் வருடாந்திர தசரா பேரணியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், மத ரீதியிலான மக்கள் தொகை கட்டுப்பாடு தேவை என்று கூறியிருந்தார். மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுடன், மத அடிப்படையிலான சமநிலையும் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கியமான விஷயம்” என்று அவர் வலியுறுத்தினார்.
5 ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்களின் மொத்த கருவுறுதல் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதை காணலாம். “நான் மோகன் பகவத்தை கேட்கிறேன். 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நமது இந்து சகோதரிகளின் இலட்சக்கணக்கான மகள்கள் காணாமல் போயுள்ளனர். இதுதான் அரசாங்கத்தின் புள்ளிவிவரம். ஆனால் அவர் அதைப் பற்றி பேச மாட்டார், “என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.
.
“இந்து ராஷ்டிரம் என்பது இந்தியத் தேசியவாதத்திற்கு எதிரானது, அது இந்தியாவுக்கு எதிரானது” என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
Source : NDTV
Bharathi Baskar shouldnt join hands with Pandey – Madukkur Ramalingam | Vetrimaaran Raja Raja cholan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.