Aran Sei

இணையத்தில் இந்துப் பெண்களை அவதூறு செய்ததாகப் புகார் – டெலிகிராம் சேனல் முடக்கம், குற்றவாளிகளைத் தேடும் காவல்துறை

ந்துப் பெண்களை அவதூறு செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்ட டெலிகிராம் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவதாக ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான டெலிகிராமில் உள்ள ஒரு குறிப்பிட்ட சேனலில், இந்து பெண்களின் புகைப்படங்களைப் பகிர்வதாகவும், அவற்றை தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

நடிகர் திலீப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு

இப்புகார்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேனல் முடக்கப்பட்டது. உரிய நடவடிக்கைகளுக்காக மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

புல்லி பாய் செயலியில் போலி பெயர்கள்: ‘இஸ்லாமியர், சீக்கியர்களிடையே வகுப்புவாத பிரச்சினை உருவாக்க சதி’ – காவல்துறை

இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்து, அவர்களின் புகைப்படங்களை இணையத்திலும் செயலியிலும் பதிவிட்டு, அப்பெண்களை ஏலமிடுவதாக ‘புல்லி பாய்’ என்ற செயலி மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையால் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Source: PTI

இணையத்தில் இந்துப் பெண்களை அவதூறு செய்ததாகப் புகார் – டெலிகிராம் சேனல் முடக்கம், குற்றவாளிகளைத் தேடும் காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்