Aran Sei

நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை சஸ்பெண்ட் செய்தால் போதாது; சட்டப்படி நடவடிக்கை வேண்டும் – மாயாவதி

பிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை கட்சியியிலிருந்து இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது. மதங்களைப் புண்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எந்த மதம் குறித்து பேசும்போதும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் பாஜகவும் தனது கட்சியினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்களை(நபிகளை விமர்சித்தவர்களை) தற்காலிக நீக்கம் செய்து வெளியேற்றுவது மட்டுமே பலனளிக்காது. அவர்களை கடுமையான சட்டங்களின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும். அனைத்து மதங்களையும் மதிப்பது நாட்டுக்கு அவசியம்” என்று கூறியுள்ளார்.

உ.பி.,யில் மாடு திருடிய வழக்கு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல்துறை விசாரணை – 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

கடந்த வாரம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபு சர்மா, முஹம்மது நபிகள்குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வந்தது. கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், காவல்துறையைச்ச் சார்ந்த 13 பேர் உள்ளிட்ட 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பாஜக செய்தித் தொடர்பாளரின் கருத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில், மோடி மற்றும் இந்தியாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்புள்ளது.

இந்தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இது – அரபு நாடுகள் கண்டனம் குறித்து ராகுல் காந்தி கருத்து

மோடியை கடுமையாக விமர்சித்து அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும், இந்திய தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும் பலர் ட்விட்டரில் தெரிவித்தனர்.

முஹம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: ndtv

Cook With Comali பார்த்தா குழந்தை பிறக்குமா? Dr Shalini Interview

நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை சஸ்பெண்ட் செய்தால் போதாது; சட்டப்படி நடவடிக்கை வேண்டும் – மாயாவதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்