கணவனாகவே இருந்தாலும் தனது மனைவியை பாலியல் வல்லுறவு செய்வது குற்றம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்.
கணவன் தனது மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வது குற்றமா இல்லையா என்ற வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மனைவி தொடர்ந்த பாலியல் வன்புணர்வு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கணவனின் கோரிக்கையைக் கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சட்டத்தில் உள்ள இத்தகைய விதிவிலக்கிற்கு வெளியேயுள்ள ‘மௌனத்தின் குரல்களை’ சட்டமியற்றுபவர்கள் கேட்க வேண்டும் என்று நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவை வரையறுக்கும் இந்தியத் தண்டனை சட்டத்தின் பிரிவு 375 ஒரு முக்கியமான விதிவிலக்கைக் கொண்டுள்ளது. அதில் கணவன் தனது 18 வயதிற்கு மேற்பட்ட மனைவியை பாலியல் வல்லுறவு செய்வது சட்டப்படி குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மனைவி தனது கணவன் மீது சுமத்திய பாலியல் வன்புணர்வு வழக்கை இந்தியத் தண்டனை சட்டத்தின் பிரிவு 376 இன் கீழ் பாலியல் வன்புணர்வு வழக்கின் கீழ் கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்
மனைவியின் உடல், மனம், ஆன்மாவின் மேல் அதிகாரம் கொண்டவர்களாக உள்ள ஆண்களின் அதிகாரம் அழிக்கப்பட வேண்டும். திருமணம் எனும் அமைப்பில் ஆணுக்கு மட்டும் எந்தவித சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை. வழங்கப்படவும் கூடாது. குறிப்பாக மனைவியிடம் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்வதற்கான உரிமை எதையும் திருமணம் வழங்கவில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்.
Source: indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.