சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருதத்தில் தயாரிக்கப்பட்ட யானம் என்ற ஆவணப்படம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தை வினோத் மங்காரா இயக்கி உள்ளார். இந்த ஆவணப்படம் மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது குறித்து சமஸ்கிருத மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் சோமநாத் உள்ளிட்ட ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் பார்த்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், ‘முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் அறிவியல் சார்ந்த வரலாற்று ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
சந்திரயான் 3, ஆதித்யா எல் 1, எஸ்.எஸ்.எல்.வி.டி. 2 உள்ளிட்ட ராக்கெட்டுகள் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அமைவிடத்தை, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக பார்வையிட்டோம். அதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிந்த உடனேயே கட்டுமான பணிகள் துவங்கும்.
கட்டுமான பணிகள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து, குலசேகரன்பட்டினம் விண்வெளி ஆராய்ச்சி மையம் இரண்டு ஆண்டுகளில் தயார் நிலையில் இருக்கும். சமஸ்கிருத மொழியில் அறிவியல் குறித்து வரலாற்று ஆவணம் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் நாம் சுலோகங்கள் கூறுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.
சமஸ்கிருத மொழி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும், பல்வேறு அறிவியல் சார்ந்த பதிவுகளை சமஸ்கிருதம் பதிவிட்டு உள்ளது’ என்றும் கூறியுள்ளார். நெட்டிசன்கள் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் இந்த கருத்துக்கு, தமிழ் மொழி பழமையானது இல்லையா ? என்றும், சமஸ்கிருதம் மொழியை எந்த மாநிலத்தில் இப்பொது பேசுகிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
பிடிஆர் விட்ட டோஸ் | கதி கலங்கிய ஒன்றியம் | Maruthaiyan | PTR Palanivel Thiagarajan | DMK | Periyar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.