Aran Sei

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

ஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட மீட்புப்பணியின் போது இறந்த தாயின் அருகில் 5 மாதக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலியப் படையினர் காசாப்பகுதியில் நடத்தியத் தாக்குதலில் இதுவரை 200 மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், 9 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றது.

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

இந்நிலையில், தாக்குதலுக்குப் பின் நடந்த மீட்புபணியின்போது, 5 மாதக்குழந்தை உயிருடன் இறந்த தாயின் அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட குழந்தையின் காலில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்  அந்தக்குழந்தையின் தந்தை தெரிவித்துளள்தாகவும் என்டிடிவி செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், அவரது நான்கு குழந்தைகளும், மனைவியும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 5 வயது குழந்தை மட்டுமே தற்போது உயிருடன் உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 மருத்துவ வசதிகள் இல்லை என தெரிவித்த கிராம மக்கள் – அவதூறு பரப்புவதாக வழக்கு பதிந்த உத்திரபிரதேச காவல்துறை

இதுகுறித்து தெரிவித்துள்ள குழந்தையின் தந்தை முகமது-அல்-கதீதி, “இந்த உலகத்தில் எனக்கென்று யாருமில்லை, எனது குழந்தையைத் தவிர” என்று கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

மேலும்,”அவர்கள் (மனைவி, இதரகுழந்தைகள்) கடவுளைத் தேடி சென்றுள்ளனர். நாங்களும் நீண்ட நாட்களுக்கு இங்கிருக்க மாட்டோம். அவர்களை நாங்கள் விரைவிலேயே சந்திப்போம்” என்றும் முகமது-அல்-கதீதி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்