Aran Sei

நகை தயாரிப்பில் இஸ்லாமியர்கள்: ஒப்பந்தத்தை ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம்

திருமலை ஏழுமலையான் உட்பட பல கோவில்களில் தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் தயாரிக்கும் வேலையை ‘தணிகை கிராப்ட்’ என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தில் இஸ்லாமியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததால் அந்நிறுவந்துடனான தனது ஒப்பந்தத்தைத் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு திருமலை ஏழுமலையான் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோயில்களுக்கான தங்க மற்றும் வைர ஆபரணங்களைத் தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கோயில்களுக்கான தேவையான ஆபரணங்களின் தயாரிப்பில், இந்துக்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: கோயிலில் இஸ்லாமியர்கள் கடை போட்டால் இந்துக்கள் எவ்வாறு உணர்வார்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கேள்வி

இந்நிலையில், ‘தணிகை கிராப்ட்’ நிறுவனம் சில இஸ்லாமியர்களைத் தங்க, வைர ஆபரணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்துவதாக, ‘பாலாஜி மெட்டல்ஸ்’ நிறுவன உரிமையாளர் வேணுகோபால் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய திருப்பதி தேவஸ்தானம், தணிகை கிராப்ட் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீறியது என்று கூறி, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source : dinamalar

அரசாணைக்கு பிறகும் தனியார் கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்?

நகை தயாரிப்பில் இஸ்லாமியர்கள்: ஒப்பந்தத்தை ரத்து செய்த திருப்பதி தேவஸ்தானம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்