ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்த திட்டம்குறித்து இளைஞர்களிடம் பல சந்தேகங்கள் உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டம் படித்த இளைஞர்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற முன்மாதிரியா அல்லது இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திட்டதிற்கு எதிராக அமைதியான முறையில் போராடுமாறு கேட்டுக் கொண்டுள்ள தேஜஸ்வி யாதவ், இந்த முழு விவகாரம்குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்று கூறி வந்த ஒன்றிய அரசு, தற்போது பதவியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் 20 கேள்விகளை முன்வைத்துள்ள தேஸ்வி யாதவ், ”மக்கள் மனதில் சந்தேகங்கள் உள்ளன. அவை அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ஏன் ராணுவத்திற்கு அதிகாரிகளை நியமிக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள தேஸ்வி யாதவ், “நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் வீரர்களாக மாற விரும்புவோரிடையே கோபம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.
பீகாரில் வன்முறை ஏற்பட்டதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டுவதை நிராகரித்த தேஸ்வி யாதவ், வன்முறைக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பு, ஆனால் அவர்கள் எதிர்க் கட்சியைக் குற்றம்சாட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Source: The Telegraph India
அமித்ஷாவின் ஆதரவு EPS க்கு தான்! OPS நிராகரிக்கப்பட்ட பின்னணி Dr Kantharaj | OPS vs EPS | ADMK | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.