காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆளும் ‘தரம் சன்சாத்’ (மதப் பாராளுமன்றம்) நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்நாட்டில் இருக்கும் எதிரியால் நாடு தாக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் ட்விட்டர் பதிவில், “ஹரித்வாரில் நடைபெற்ற கூட்டம் குறித்த மேலோங்கிய மௌனம் கவலையளிக்கிறது. பாஜக தலைமை அமைதியாக இருக்கிறது. இதைப் புறக்கணிப்பது பைத்தியக்காரத்தனமா? மௌனத்தின் சதியா? இப்போது சத்தீஸ்கர் கூடுகிறது. உள்ளுக்குள் இருக்கும் எதிரிகளால் தாக்கப்படுகிறதா இந்தியா? இந்து மதம் ஆபத்தில் இருக்கிறதா?” என்று சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற தர்ம நாடாளுமன்றம்(தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பல இந்து மத சாமியார்கள் கண்டனத்திற்குரிய வகையில் பேசியுள்ளதோடு, சிறுபான்மை சமூகத்தினரை கொலை செய்யவும் அழைப்பு விடுத்தனர்.
திரிணாமூல் காங்கிரஸ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.