Aran Sei

மரணம் ஒன்று தான் நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான தீர்வா? – வழக்கறிஞர் நவ்ஃபல் கேள்வி

வீரப்பனின் சகோதரர் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது மிகப் பெரும் கவலை அளிக்கின்றது என்று தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான நவ்ஃபல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சேலம் மத்திய சிறையில் தண்டனை சிறைவாசியாக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டை கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்படும் வீரப்பனின் சகோதரர் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது மிகப் பெரும் கவலை அளிக்கின்றது. கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனைச் சிறைவாசியாக காலம் கழித்த மாதையன் அவர்களுக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்: அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது – எஸ்.டி.பி.ஐ

இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 161-ன்படி மாதையன் முன் விடுதலையை பரிசீலிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 16-12-2015 அன்று உத்தரவிட்டும் அந்த உத்தரவை தமிழக அரசு உரிய முறையில் பரிசீலிக்கவில்லை, அதனைத் தொடர்ந்து மாதையன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றமும் முன் விடுதலையை அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டும் சட்டப்படியான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

மரணம் ஒன்று தான் நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான தீர்வாக தொடர்வது சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குகிறது, தமிழ்நாடு சிறை விதிகள் சட்டம் 1983 விதி 633 மரணத் தருவாயில் உள்ள சிறைக்கைதிகள் தங்களது கடைசி காலத்தை கண்ணியமான முறையில் அவர்களது வீடுகளில் கழிப்பதற்கு வழிவகை செய்கிறது, ஆனால் மேற்பட்ட முறை பயன்பாட்டில் உள்ளதா என்ற கேள்வியே மிகப்பெரிய அளவில் எழுகின்றது.

வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 8 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 20, 30 ஆண்டுகள் கடந்தும் முன்விடுதலை பரிசீலனை இஸ்லாமியர்கள் உட்பட குறிப்பிட்ட சிறைவாசிகளுக்கு மட்டும் மறுக்கப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தின் முன் சம பாதுகாப்பு என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லையே என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் மற்றும் நீண்ட கால சிறைவாசம் அனுபவிக்கும் உளவியல் ரீதியான பாதிப்புகள் அடைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை NCHRO தமிழக அரசுக்கும், பொது சமூகத்திடமும் முன்வைக்கின்றது இந்திய நீதி பரிபாலனத்தின் அடிப்படையே தவறு செய்தவர்களைத் திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தவே அன்றி தண்டிக்கும் நோக்கம் மட்டுமே பிரதானமாக கொண்டதல்ல என்று தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நவ்ஃபல் தெரிவித்துள்ளார்.

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush

மரணம் ஒன்று தான் நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான தீர்வா? – வழக்கறிஞர் நவ்ஃபல் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்