இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தயான் சந்த் பெயரில் விருது வழங்கப்பட்டும் என்று பிரதமர் மோடி அறிவிப்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வரவேற்றுள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வரும் ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது, இனி மேஜன் தியான் சந்த் கேள் ரத்னா என்ற பெயரில் வழங்கப்பட்டும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். நாடு முழுவதம் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், “விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பெயர்களில் விருதுகள் மற்றும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது முழுவதுமாக வரவேற்கிறேன்.” என தெரிவித்துள்ளர்.
Absolutely welcome this move. Sportsman getting recognition and award being named after him or her. Hopefully start of many such things in sports #DhyanChandAward #dhyanchand ji
— Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021
மேலும், ”எதிர்காலத்தில் விளையாட்டு மைதானங்களுக்கும் வீரர்கள் பெயரும் சூட்டப்படும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Hopefully in the future sports stadium names will be after sportsmen too.
— Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021
பிப்ரவரி 24, 2021 ஆம் தேதி, குஜராத்தில் திறக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்ப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள் :
மோடியின் பெயரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்
“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.