Aran Sei

சிறுபான்மையினருக்கு எதிரான தலையங்கம் கொண்ட செய்தித்தாள் ரயில்களில் விநியோகம்: விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஐஆர்சிடிசி

Credit: https://twitter.com/gopikabashi

சிறுபான்மையினருக்கு எதிரான தலையங்கம் கொண்ட செய்தித்தாளை ரயில்களில் விநியோகம் செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) உத்தரவிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22), பெங்களூரு – சென்னை சதாப்தி விரைவு ரயிலில், சிறுபான்மையினருக்கு எதிரான தலையங்கம் மற்றும் செய்திகள் கொண்ட “தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்” செய்திதாள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாலின சமத்துவ ஆர்வலர் கோபிகா பக்ஷி  அவரின் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை நான் பெங்களூர்-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏறினேன், மற்ற எல்லா இருக்கைகளிலும் இந்த அப்பட்டமான பிரச்சார செய்தித்தாளான ‘தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்’ இருந்தது. இதுவரை இந்த செய்தித்தாளை நான் கேள்விப்பட்டதே இல்லை. இதை  ஐஆர்சிடிசி  எப்படி  அனுமதிக்கிறது?”  என்று பதிவிட்டிருந்தார்.

‘ரயில்வே மருத்துவ ஊழியர்களுக்கு இந்தியில் பாடம்’ – சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்தில் பாடம் நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவு

செய்தித்தாளின் தலையங்கத்தில், “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை அங்கீகரிக்க வேண்டும்.” என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும், மற்றொரு தலைப்புச் செய்தியில், “ஹிட்லரைப் போல ஔரங்கசீப்பை இனப்படுகொலை செய்தவர் என்று ஐ.நா அறிவிக்க வேண்டும்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு கழகத்தை மூடும் ரயில்வே வாரியம் – இரண்டு மாதங்களில் மூடப்படும் இரண்டாவது நிறுவனம்

இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “மாண்புமிகு ரயில்வே அமைச்சர் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடுவாரா?. சதாப்தி எக்ஸ்பிரஸில் பிரச்சாரப் பொருட்களை அனுமதிப்பது என்பது ரயில்வே அமைச்சத்தின் கொள்கை முடிவா?. மக்களவையில் இந்த பிரச்சனைக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “ஐஆர்சிடிசியால் சந்தா செலுத்தப்பட்ட வெளியீடுகளின் பட்டியலில், இத்தகையை செய்தித்தாள் எப்படி வந்தது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விலை போகாத ரயில்வே வழித்தடங்கள் – மலிவு விலைக்கு விற்க முடிவு செய்திருக்கிறதா ஒன்றிய அரசு?

இது தொடர்பாக பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி செய்தித் தொடர்பாளர் ஆனந்த ஜா, “நாங்கள் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம், மேலும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஐஆர்சிடிசி-அங்கீகரிக்கப்பட்ட வெளியீடுகளில் இந்தத் செய்தித்தாள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், “அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள் ரயிலுக்குள் எப்படி நுழைந்தது என்பது தொடர்பாக பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரயில் பெங்களூரு கோட்டத்திற்கு சொந்தமானது என்பதையும், சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றது என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”  என்று கூறியுள்ளார்.

Source: The Telegraph

சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான் – பேராசிரியர் ஜெயராமன் குற்றசாட்டு

சிறுபான்மையினருக்கு எதிரான தலையங்கம் கொண்ட செய்தித்தாள் ரயில்களில் விநியோகம்: விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஐஆர்சிடிசி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்