சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்திருப்பதாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா அகதிகள்அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 10 கோடியைக் கடந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளது.
எத்தியோப்பியா, புர்கினா பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கனிஸ்தான், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐ.நா அகதிகள் அமைப்பின் தலைவர் ஃபிலிப்போ கிரான்டி, நடப்பாண்டில் உக்ரைன் போர் காரணமாக 1.6 கோடி மக்கள் இடம் பெயர்ந்ததால் இந்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கருதி உள்நாட்டுக்கு உள்ளேயே இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த 2020-ல் 5.41 கோடியாக இருந்ததாகத் தெரிவித்த ஃபிலிப்போ கிரான்டி, அது தற்போது 5.91 கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Source: TheHindu/Kamadenu
Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.