Aran Sei

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும், தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளதாகவும், சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கருத்து கேட்பது சட்டவிரோதம் என மனுவில் அவர்கள் தெரிவித்தனர்.

பில்கிஸ் பானு வழக்கு: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுதலை செய்து மாலை அணிவித்து கொண்டாடுவதற்கு அல்ல – எம்.பி. மௌவா மொய்த்ரா

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்தார். இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை அமலில் இருக்கும் என்றும் அதே நேரம் மின் கட்டணம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Kallakurichi Sakthi School unconditional Fight for bail | Ravikumar | Shanthi | Deva’s Update 14

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்