Aran Sei

அரசின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய கடமை அறிவுஜீவிகளுக்கு உள்ளது – உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்து

ரசின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய கடமை பொது அறிவுஜீவுகளுக்கு உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் பொய்கள், தவறான கதையாடல்கள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எதிராக அரசாங்கங்களைப் பொறுப்பாக்குதல், பாதுகாப்பை ஏற்படுத்துதல் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

“அதிகாரத்திற்கு உண்மையைப் பேசுவது: குடிமக்கள் மற்றும் சட்டம்” என்ற தலைப்பில் பேசிய சந்திரசூட், “அரசு தரும் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் மருத்துவ உண்மைகளை (தற்போதை சூழ்நிலையில்) மீது அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம். இதற்குக் கொரோனா தரவுகளை கையாளுதளே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என அவர் கூறியுள்ளார்.

”உண்மையைக் கொண்டு மட்டுமே அரசை நம்ப முடியாது. சர்வாதிகார அரசாங்கங்கள் அதிகாரத்தை ஒருங்கிணைக்கப் பொய்களை தொடர்ந்து நம்பியதற்காக அறியப்படுகின்றன. கொரோனா தரவுகளை தவறாக கையாளும் போக்கு நாடுகளிடையே அதிகரித்து வருகிறது” என அவர் குறிப்பிட்டார்.

“போலி செய்திகளின் நிகழ்வு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோயின்போது உலக சுகாதார நிறுவனம் இதை உறுதி செய்தது… அதை ’இன்ஃபோடெமிக்’ என்று அழைக்கவும். மனிதர்கள் பரபரப்பான செய்திகளுக்கு ஈர்க்கப்படும் ஒரு போக்கு உள்ளது… அவை பெரும்பாலும் பொய்களை அடிப்படையாக கொண்டவை” என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியிலேயே தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியது. உலக சுகாதார நிறுவனம் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவது குறித்து எச்சரித்தது. இதில் ’தவறான தகவல்களை திட்டமிட்டே பரவுவதும் அடங்கும்” என அவர்கள் குறிப்பிட்டார்.

’உண்மைக்குப் பிந்தைய’ உலகத்தைப் பேசிய அவர், ”இதில் ’எங்கள் உண்மை’ மற்றும் ‘உங்கள் உண்மை’ ஆகியவற்றுக்கு இடையில் போட்டி உள்ளது. மேலும், ஒருவரின் கண்ணோட்டத்துடன் ஒத்துபோகாத ஒரு ’உண்மையை’ புறக்கணிக்கும் போக்கு உள்ளது.” என அவர் கூறியுள்ளார்.

”நாம் உண்மைக்கு பிந்தைய உலகில் வாழ்கிறோம். சமூக ஊடக தளங்கள் பொறுப்பு… ஆனால் குடிமக்களும் பொறுப்பாளிகள். நாம் எதிரோலி அறைகல் நோக்கிச் சாய்ந்து கொண்டிருக்கிறோம், எதிர்க்கும் நம்பிக்கைகள் பிடிக்காது. சமூக பொருளாதார, மத ரீதியில் பெரிய அளவில் பிளவுபட்டுள்ள உலகில் நாம் வாழ்கிறோம்.” என அவர் கூறினார்.

”நம் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகும் செய்தித்தாள்களை மட்டுமே நாம் படிக்கின்றோம். நம் கருத்துக்கு ஒத்து வராதவர்கள் எழுதிய புத்தங்களை நாம் புறக்கணிக்கின்றோம். யாராவது ஒருவர் வித்தியாசமான கருத்தைக் கூறிக் கொண்டிருக்கும்போது நாம் தொலைக்காட்சியை அணைத்து விடுகின்றோம். ’சரியானதா’ என்று அக்கறை செலுத்து அளவிற்கு அது உண்மையானதா என்பது குறித்து கவலை கொள்வதில்லை” எனச் சந்திரசூட் விளக்கினார்.

”போலி செய்திகளை எதிர்கொள்ள நாம் நம் பொது நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும். எந்த வகையான செல்வாக்கில் இருந்தும் விடுபட்ட ஒரு பத்திரிகை இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்… அரசியல் அல்லது பொருளாதார பாரபட்சமற்ற முறையில் தகவல்களை வழங்கும் ஒரு ஊடகம் நமக்குத் தேவை” என நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தினார்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒரு நேர்மறையான சூழ்நிலை வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், ”இதில் மாணவர்கள் உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்த கற்றுக் கொள்ளலாம் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி எழுப்ப முடியும்.” என தெரிவித்திருந்தார்.

தங்களை சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அதிக உணர்திறன் கொண்டவராகவும் இருக்குமாறு மக்களை வலியுறுத்திய அவர், “மற்றவர்களின் கருத்துக்களுக்கு நாம் விரைவாக தீர்ப்பு வழங்கக் கூடாது. சாதி, மதம், மொழி, பொருளாதார நிலை, பாலின அடிப்படையில் தடைகளை நாம் அகற்ற வேண்டும்.” என கூறினார்.

 

 

 

 

 

அரசின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய கடமை அறிவுஜீவிகளுக்கு உள்ளது – உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்