Aran Sei

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பாஜக செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் – மம்தா பானர்ஜி கேள்வி

முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து பேசியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ”பாஜக செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்குப் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் இருப்பதாகவும், மாநிலத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கத்தில் மக்கள் போராட்டம்; இணைய சேவையை முடக்கிய காவல்துறை

முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா குறித்து குறிப்பிடுகையில், பாஜக செய்த பாவத்திற்கு சாதாரண மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: உ.பி, யில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

“நான் முன்பே கூறியது போல், கடந்த இரண்டு நாட்களாக ஹவுராவில் நடந்த வன்முறை சம்பவங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன.  அவர்கள் கலவரத்தை தூண்ட விரும்புகிறார்கள். ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்த பாவத்தால் சாமானியர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெங்காலி மொழியில் பதிவிட்டுள்ளார்.

Source: Thenewindianexpress

Jaggi ஏதும் சிக்கிருச்சா? | Murugavel Interview | Sadhguru Jaggi Vasudev

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பாஜக செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் – மம்தா பானர்ஜி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்