Aran Sei

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்தற்கு நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பல நகரங்களில்  ஜூன் 10 அன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இரு மாநிலங்களில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தில் 333 ஆகவும், வங்காளத்தில் 200 ஆகவும் உயர்ந்துள்ளது.

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

உத்தர பிரதேச காவல்துறையால்  முதல் தகவல் அறிக்கை(FIR) 13 பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க காவல்துறை இதுவரை 42 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வங்காளத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஹஷ்னாபாத் ரயில் நிலையம் அருகே போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்ததால் ரயில் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாதாஹரி ரயில் நிலையம் அருகே திரண்டிருந்த போராட்டக்கார்களைக் கலைக்க காவல்துறையினர்  தடியடி நடத்தியுள்ளனர்.

ஜூன் 9 அன்று மேற்குவங்கத்தில் உள்ள ஹவுரா  மாவட்டத்தில்  போராட்டம் நடைபெற்றது. “கடந்த 48 மணி நேரத்தில் புதிய வன்முறை எதுவும் பதிவாகவில்லை” என்று மேற்கு வங்காளத்தின் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்துள்ளார்.

நபிகள் விவகாரம்: அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என இந்தியாவை அறிவுறுத்திய சீனா

உயிர் சேதமோ, பலத்த காயமோ ஏற்படவில்லை என்றும் சாலை மறியல், தாக்குதல், கலவரம், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், மதவெறியை பரப்புதல் போன்றவற்றுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று  மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜில் 92 பேர், சஹரன்பூரில் 81 பேர், ஹத்ராஸில் 51 பேர், அம்பேத்கர் நகரில் 41 பேர், மொராதாபாத்தில் 40 பேர், ஃபிரோசாபாத்தில் 17 பேர், அலிகாரில் 6 பேர், ஜலானில் 5 பேர் கைது செய்யப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கும்பகோணம்: புதுமண தம்பதிகளை ஆணவக் கொலை செய்த உறவினர்கள் – காவல்துறை வழக்குப்பதிவு

ஜாவேத் முகமதுவின் வீட்டை இடித்ததற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகிய வழக்கறிஞர்கள் குழு, வழக்கமான மனுவாகத் தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி  கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஜேஎன்யு முன்னாள் மாணவி அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடக தளத்தில் பதிவிட்ட நபர் மீது மகாராஷ்டிர மாநிலம் தானேயில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: thehindu

ஆளுநரா? சனாதன காவலரா? குட்டு வைத்த முரசொலி

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்