Aran Sei

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பிரதமர் தலையிட்டு விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் – திரைக்கலைஞர் நசிருதீன் ஷா வேண்டுகோள்

முகமது நபி குறித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளரின் தலைவரின் கருத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு விஷம் பரவுவதை நிறுத்த வேண்டும் என்று பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் நசிருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த மக்களுக்கு நல்ல புத்தியை வழங்குமாறு பிரதமரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். “பிரதமரை வெறுப்பாளர்கள் பலர் ட்விட்டரில் பின்தொடருகின்றனர். அவர்களை பிரதமர் ஏதாவது செய்ய வேண்டும். விஷம் வளராமல் தடுக்க அவர்(பிரதமர்) முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கு – கண்ணகியின் அண்ணனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு; இருவர் விடுதலை

முன்னதாக, முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.

மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால்தான் நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது – ஒவைசி குற்றச்சாட்டு

உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Source: ndtv

வெளியான மிரட்டல் கடிதம் வெளிவராத பகீர் உண்மைகள் Vikraman Interview |

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பிரதமர் தலையிட்டு விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் – திரைக்கலைஞர் நசிருதீன் ஷா வேண்டுகோள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்