Aran Sei

தேசியகீத அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன் அறிவிப்பு

தேசியகீதம் இசைப்பதற்குள் பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது தேசியகீத அவமதிப்பாகும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். அப்போது திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற வார்ததைகளை படிக்காமல் புறக்கணித்தார்.

இதற்கு ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்பு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் போதே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்: தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி வரும்13-ம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.

Fitting reply to @MaridhasAnswers for fake narrative against journalists I Annamalai I BJP I DMK

தேசியகீத அவமதிப்பு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் – திருமாவளவன் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்