Aran Sei

ராமரை விமர்சித்த எழுத்தாளர் கே.எஸ்.பகவான்: மைவீசி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் மீரா ராகவேந்திரா

பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானபொழுது கன்னட  எழுத்தாளர் கே.எஸ். பகவான் மீது மைவீசி தாக்குதல் நடப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதோடு, அது தொடர்பான காணொளியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கறிஞர் மீரா ராகவேந்திரா பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தக் காணொளியில், மதம் தொடர்பான தனது கருத்துக்களுக்கு, பகவான் வெட்கப்பட வேண்டும் என மீரா கூச்சலிடுவதை காணமுடிகிறது.

கன்னட எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர் மற்றும் முன்னாள் ஆங்கில பேராசிரியரான கே.எஸ்.பகவான். ஆரம்பகால மதத் தலைவர்கள், சாதி பிரிவினையையும், பெண்கள்மீதான ஒடுக்குமுறை எப்படி பயன்படுத்தினர் என்பது குறித்து அதிகமாக எழுதியவர்.

கன்னட பத்திரிக்கையாளர் கவுர் லங்கேஷ் படுகொலை  செய்யப்பட்டபொழுது, வலது சாரி அமைப்புகளால், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நபர்கள் பட்டியலில் பகவானின் பெயரும் இருந்தது என என்டிடிவி கருத்து தெரிவித்து இருந்தது.

பகவான் மீது மைவீசியதற்காக மீரா ராகவேந்திரா மீது தவறாக நடத்தல் மற்றும் கிரிமினல் செயல்பாடு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்பாகப் பகவான் மீது இந்து மதத்தையும்,  இந்து கடவுளான ராமரையும் அவமத்ததாக, மீரா ராகவேந்திரா புகார் ஒன்றை அளித்திருந்தாரென தி வயர் தெரிவித்துள்ளது.

”இரண்டு மாதங்களுக்கு முன்னர், மைசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்து மதம் என்று ஒன்று இல்லை. மக்கள் இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனப் பகவான் பேசியது, இந்துக்கள் மனதை புண்படுத்தி  இருக்கிறது” என மீரா ராகவேந்திரா கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், பகவான் எழுதிய ’ராம மந்திர ஏகே பேடா (ராமர் கோயில் ஏன் தேவையில்லை)’ புத்தகத்தை அரசு நூலகங்கள் வாங்காது, என மாநில கல்வி அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் தெரிவித்துள்ளாகவும், இந்தப் புத்தகத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மூலம், மதம் மற்றும் மத உணர்வுகளைப் புண்டுத்தியதாக, வலது சாரி அமைப்புகள் அமைப்பு கொடுத்த புகாரில் பெயரில் பகவான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295A கீழ் வழக்கு பதியப்பட்டு இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள கே.எஸ்.பகவான், கடந்த காலங்களில் கர்நாடகா ராஜ்யோத்சவா மற்றும் கர்நாடகா சாகித்திய அகாடமி விருதுகளைப் பெற்றுள்ளாரென தி வயர் கூறியுள்ளது.

ராமரை விமர்சித்த எழுத்தாளர் கே.எஸ்.பகவான்: மைவீசி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் மீரா ராகவேந்திரா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்