Aran Sei

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் – 14 ஆண்டுகளில் இல்லாத அளவு 3.83 பில்லியனாக உயர்வு

2021 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்குகளில் உள்ள பணம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு 3.83 பில்லியன் பிராங்குகளாக (பிராங்கு – சுவிஸ் பணத்தின் பெயர்; ஒரு பிராங் ஏறத்தாழ 80 (இந்திய) ரூபாய்க்குச் சமம்) உயர்ந்துள்ளது என்று ஸ்விஸ் நேஷனல் வங்கியின் (SNB) சமீபத்திய தரவுகள்மூலம் தெரியவந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு பணம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டு மொத்தமாக ரூ.30 ஆயிரம் கோடிமேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்னிபத் விவகாரம்: ராணுவத்தை காவிமயமாக்கும் பாஜக – வைகோ

சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் சேமிப்பு தொகைகுறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் மொத்த வைப்பு தொகைகுறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த தகவலின்படி கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் ரூபாய் 30,500 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார் 10,000 கோடி அதிகம் என்றும் 2020ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் ரூபாய் 20 ஆயிரத்து 700 கோடி இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே மோடிக்கு கேட்கிறது; மக்களின் குரல் கேட்பதில்லை – ராகுல்காந்தி விமர்சனம்

ஒரே ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு கணக்குகள் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,800 கோடி பிராங்குகள் உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளதும் ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும்.

கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் 6.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என இருந்த நிலையில் 2011, 2013, 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் பெரும்பாலும் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களால் வரவு வைக்கப்படும் பணம் அதிகரித்து வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவு குறைந்தாலும், 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அக்னிபத் விவகாரம்: நாட்டின் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைக்கிறார் – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள், தனிநபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகள் உள்பட அனைத்து வகையான நிதிகளையும் கணக்கில் கொண்டு தான் இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

239 வங்கிகளை உள்ளடக்கிய சுவிஸ் வங்கி அமைப்பு முழுவதும் வாடிக்கையாளர்களின் மொத்த வைப்புத்தொகை 2021 இல் ஏறக்குறைய 2.25 டிரில்லியன் பிராங்குகளாக உயர்ந்துள்ளது. நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் மொத்த நிதி கிட்டத்தட்ட 1.5 டிரில்லியன் பிராங்குகளாக உயர்ந்தது.

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

சொத்துக்களின் அடிப்படையில் (அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய நிதி), 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 4.68 பில்லியன் பிராங்குகளை இந்திய வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். இது 10 சதவீதம் அதிகமாகும்.

சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 379 பில்லியன் பிராங்குகளோடு இங்கிலாந்து முதலிடத்திலும், 168 பில்லியன் பிராங்குகளோடு அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹாங்காங், லக்சம்பர்க், பஹாமாஸ், நெதர்லாந்து, கேமன் தீவுகள் மற்றும் சைப்ரஸ் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் ஆகும். போலந்து, தென் கொரியா, சுவீடன், பஹ்ரைன், ஓமன், நியூசிலாந்து, நார்வே, மொரீஷியஸ், வங்கதேசம், பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 44வது இடத்தில் உள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் – புனே காவல்துறைக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அனைத்தையும் மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சத்தை போடுவதாக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Theindianexpress

அக்னீபத் திட்டமும்! ஆர்எஸ்எஸ் ராணுவமும்! Peter Alphonse | Agnipath Indian Army

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் – 14 ஆண்டுகளில் இல்லாத அளவு 3.83 பில்லியனாக உயர்வு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்