அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து ரூ.83.02 ஆக சரிவடைந்துள்ளது.
கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயன்று வரும் நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் உலக பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகிறது.
மேலும், இந்த போரினால் கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. வட்டி விகித அதிகரிப்பு, அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. அதேவேளை, முதலீடுகளை பல நாடுகளும் டாலருக்கு மாற்றி வருவதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
மேலும், இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகளின் வெளியேற்றல் போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டது.அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 83.02 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து ரூ.83.02 என்ற நிலையை எட்டியது.
Source : telegraphindia
Kamaraj slams Badri for his comment on Arignar Annadurai | Kamaraj Interview | Hindi Imposition
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.