அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவச் சங்கம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருத்துவ முறைகள் கொண்டு மக்களுக்குச் சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் புதிய முறையில் சிகிச்சையளிக்கும் திட்டத்தைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அம்முறைக்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் (ஜ.எம்.ஏ) வரும் பிப்ரவரி 1- 14ஆம் தேதிவரை நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
“மக்கள் பிரதிநிதிக்குக் கிடைக்கும் மருத்துவம், மக்களுக்கும் கிடைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன்
அதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலோபதி, ஹோமியோபதி உள்ளிட்ட ஒவ்வொரு மருத்துவ முறையையும் தனிதனியாக மேம்படுத்துவதைவிடுத்து, மத்திய அரசு அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனைக் கண்டித்து நாடு முழுவதும் பிப்ரவரி 1ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளோம்.
பிப்ரவரி 7ஆம் தேதி மருத்துவர் சங்கங்கள் கூட்டமைப்பு உள்பட உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைய உள்ளனர்.” என இந்திய மருத்துவச் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.