தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல் இருப்பதுபோல் அமைதி காப்பது ஆபத்தானது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சீன ராணுவம் இதுவரை இந்தியாவிலிருந்து 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்திய அரசோ சீனா நம்மிடமிருந்து எதையுமே எடுக்கவில்லை என்ற மனோபாவம் கொண்டுள்ளது. முன்னர் இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த ரோந்துப் பகுதிகள் கூட இப்போது சீனாவிடம் சென்றுவிட்டது என்று லடாக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீனா நம்மிடமிருந்து எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பது மிகவும் ஆபத்தானது. இந்த மறுப்பு சீனர்களுக்கு இன்னும் மூர்க்கத்தனமாக ஆக்கிரமிப்பில் முன்னேறும் நம்பிக்கை தரும். மாறாக நம் எல்லையை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கு நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் தங்கள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறும் அமித்ஷாவும் மற்ற பாஜக தலைவர்களும் ஜம்மு முதல் லால் சவுக் வரை ஒரு யாத்திரை நடைப்பயணமாக செல்ல வேண்டும் எனக் கோருகிறேன். திட்டமிட்ட படுகொலைகளும், குண்டு வெடிப்புகளும் ஜம்மு காஷ்மீரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Source : NDTV
LIC-க்கு பாடை கட்டிய அதானி | வீணாய் போன மோடியின் உழைப்பு | Aransei Roast | BJP | Modi | Adani | BBC
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.