Aran Sei

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுத்த  ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி , வேலு நாச்சியார், பாரதியார் போன்ற தலைவர்களின் நினைவுகளைப் போற்றும் விதமாக தமிழக அரசின் சார்பில் ஊர்தி தயாரிக்கப்பட்டு அந்த ஊர்தி குடியரசு தினவிழாவில் அணிவகுப்பாக கொண்டுவரப்படும் என்ற நிலையில் அதற்கு ஒன்றிய அரசு மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

‘From Shadows to Stars’ – ரோகித் வெமுலா நினைவு நாள்

பாரதியார், சிதம்பரனார், வேலுநாச்சியார முதலியோரை வெளிநாட்டவர்கள் யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு காரணத்தைக் கூறி அதனை மறுத்துள்ளது வெட்கத்துக்குரியது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் மனங்களைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?

எனவே ஒன்றிய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக அலங்கார ஊர்தியையும் அணிவகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை வெளியிட வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்