Aran Sei

முஹம்மது நபியை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை – ஈரானின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு

Credit: The Wire

முஹம்மது நபி குறித்து அவதூறான கருத்து தெரிவித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்திருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமிராப்டோல்லாலாஹியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்த உறுதியை அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஹொசைன் அமிராப்டோல்லாலாஹியன், முதல் நாளான நேற்று இந்திய வெளியுறவுத் அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்தார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பிரதமர் தலையிட்டு விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் – திரைக்கலைஞர் நசிருதீன் ஷா வேண்டுகோள்

முஹம்மது நபி தொடர்பாக பாஜக பிரமுகர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு இஸ்லாமிய நாடுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், இந்த பயணத்தை ஈரான் அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

அஜித் தோவலுடனான ஹொசைன் அமிராப்டோல்லாலாஹியனி சந்திப்பிற்கு பிறகு ஈரான் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஈரானின் தரப்பின் நிபந்தனைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், நபிகள் தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், அரசாங்க மற்றும் அதன் தொடர்புடைய மட்டத்தில் பாடம் கற்கும் வகையில் கையாளப்படுவார்கள் என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம் – நேரில் ஆஜராக நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பிய மகாராஷ்டிர காவல்துறை

மத நம்பிக்கைகள் குறிப்பாக நபிகள் நாயகம், மத சகிப்புத்தன்மை, வரலாற்று சகவாழ்வு மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே நட்புறவு ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தியதற்காக இந்திய மக்களையும் அரசாங்கத்தையும் வெளியுறவு அமைச்சர் பாராட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இஸ்லாமியர்களின் மத புனிதம் குறித்த உணர்வுகளுக்கு இந்திய அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குற்றம் செய்தவர்களை கையாளுவதில் இந்திய அதிகாரிகளின் நிலைப்பாட்டில் இஸ்லாமியர்கள் திருப்தி அடைந்துள்ளனர்” என்று ஈரான் அமைச்சர் கூறியுள்ளார்.

முஹம்மது நபி குறித்த சர்ச்சை – அரபு நாடுகளில் பாஜகவுக்கு எதிர்ப்பு

இது தொடர்பாக இந்திய அரசாங்கத் தரப்பு அமைதியாக இருப்பதால், எந்த மாதிரியான நடவடிக்கை குறித்து அஜித் தோவல் குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவாக தெரியவில்லை.

Source: The Hindu

Nupur Sharma வின் பகீர் பின்னணி Nupur Sharma Comment on Prophet Muhammad | India Vs Qatar | Aransei

 

முஹம்மது நபியை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை – ஈரானின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்