Aran Sei

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா மீள 12 ஆண்டுகள் ஆகலாம் – ரிசர்வ் வங்கி அறிக்கை

கொரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவிய காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளை பகுப்பாய்வு செய்ததில், பொருளாதார இழப்புகள் ரூ. 52 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நாணயம் மற்றும் நிதி தொடர்பாக ‘தொற்றுநோயின் வடுகள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தொடர்ச்சியான கொரோனா அலைகளால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை மீளத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு போக்குகள் ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மக்கள் விரோத கொள்கைகளை விரைவுபடுத்தும் ரிசர்வ் வங்கி’ – வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

“ரஷ்யா-உக்ரைன் போருடன் சேர்ந்து உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் காரணமாக பொருட்களின் விலை உயர்வு, உலகளாவிய மற்றும் உள்நாட்டு வளர்ச்சி கீழ்நோக்கி செல்வதற்கான அபாயங்கள் ஆகியன அதிகரித்துள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“2020-21 நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் 6.6 விழுக்காடாகவும் 2021-22 நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் 8.9 விழுக்காடாகவும் உள்ள நிலையில், 2022-23 நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் 7.2 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வளர்ச்சி விகிதம் 7.5 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், 2034-35 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சீராகும் என்று எதிர்பாக்கப்படுகிறது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்

ரிசர்வ் வங்கியின் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் (டிஇபிஆர்) அதிகாரிகளால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகள் முழுவதுமாக பங்களிப்பாளர்களுடையவை என்றும் அவை தங்களின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Source: NDTV

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா மீள 12 ஆண்டுகள் ஆகலாம் – ரிசர்வ் வங்கி அறிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்