Aran Sei

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிப்பீடியாவில் அவதூறு : விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

நேற்று (செப்டம்பர் 4) நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஒரு கேட்ச்சை கைவிட்ட வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, “காலிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்காக” விளையாட அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விக்கிப்பீடியா வலைத்தளத்தில் தகவல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பின்னர் அந்த தகவல் அதிலிருந்து நீக்கப்பட்டது.

இது குறித்து விளக்கம் கேட்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் உள்ள விக்கிப்பீடியா நிர்வாகிகளை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.

T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பதிவு – ஆக்ரா, உதைப்பூர் மற்றும் ஜம்முவில் 6 பேர் கைது

இந்நிலையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை… அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், “யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குரியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்” என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

இதே போல பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source : india today

சங்கிகளின் Bulldozer ஊர்வலம் | பஞ்சர் செய்த அமெரிக்கா | Yogi Adityanath | New Jersey | India Day

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிப்பீடியாவில் அவதூறு : விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்